என் மலர்

  செய்திகள்

  24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் தலைமையில் மரியாதை
  X

  24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் தலைமையில் மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான 24-ந்தேதி அவரது திருவுருவப்படத்திற்கு, அ.தி.மு.க அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
  சென்னை:

  அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளான 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு, அ.தி.மு.க அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

  அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 69-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.  இந்த ஆண்டு ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் 24-ந்தேதி அன்றும், அதன் பின்னரும் அமைந்திட வேண்டும் என்று அ.தி.மு.க. உடன்பிறப்புகளை தலைமைக் கழகம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.

  ஏழை, எளியோருக்கு பல வகையான நலத்திட்ட உதவிகள்; மாணவச் செல்வங்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள்; முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் நற்சுவை உணவு வழங்குதல்; இன்ன பிற வழக்கமான நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு எல்லா இடங்களிலும் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப் படங்களை மக்கள் பார்வைக்கு வைத்து, மலர் அலங்காரம் செய்து கழகக் கொடிகளை ஏற்றி பிறந்த நாள் விழாவை சிறப்புற நடத்திட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் தலைமைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×