search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழவரம் அருகே கணவன் - மனைவியை தாக்கி நகை - பணம் கொள்ளை
    X

    சோழவரம் அருகே கணவன் - மனைவியை தாக்கி நகை - பணம் கொள்ளை

    சோழவரம் அருகே கணவன் - மனைவியை தாக்கி நகை  மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அடுத்த நெற்குன்றம் பண்டிதர் தெருவை சேர்ந்தவர் செங்கல் வராயன். இவரது மனைவி தாட்சாயினி. விவசாயம் செய்து வருகிறார்கள்.

    நேற்று இரவு இருவரும் உள்தாழ்பாள் போட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தனர். காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்து இருந்தனர். நள்ளிரவில் 4 மர்மநபர்கள் ஜன்னல் வழியாக கம்பியை விட்டு உள்தாழ்பாளை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    சத்தம் கேட்டு எழுந்த செங்கல்வராயன், தாட்சாயினியை மர்மநபர்கள் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் மயங்கி விழுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.8 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    மயக்கம் தெளிந்து எழுந்த கணவன்-மனைவி கொள்ளை குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சோழவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×