என் மலர்

  செய்திகள்

  தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்
  X

  தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  தா.பேட்டை:

  தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் விலைவாசி உயர்வு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

  ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது பதவியில் உள்ள உச்சநீதி மன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்,

  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர அரசை கேட்டுக் கொள்வது, வறட்சி பாதிப்பால் இறந்துபோன விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 15 லட்சம் வழங்கிட வலியுறுத்துவது, பேரூராட்சி பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், வறட்சி பாதிப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் வருகிற 7-ம்தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், காமராஜ், கோவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×