என் மலர்

  செய்திகள்

  நெற்குன்றத்தில் பழ வியாபாரி வீட்டில் 69 பவுன் நகை கொள்ளை
  X

  நெற்குன்றத்தில் பழ வியாபாரி வீட்டில் 69 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெற்குன்றத்தில் பழ வியாபாரியின் வீட்டில் 69 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  வில்லிவாக்கம்:

  நெற்குன்றம், சின்மயா நகர், குமரன் நகரில் உள்ள 2 மாடி வீட்டில் வசித்து வருபவர் ரமேஷ். கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த பழ வியாபாரம் செய்து வருகிறார்.

  நேற்று இரவு அவர் வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் தூங்கினார்.

  நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மாடியில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 69 பவுன், நகை, பணத்தை அள்ளி சென்றுவிட்டனர்.

  இன்று அதிகாலை ரமேஷ் எழுந்து பார்த்த போது வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×