என் மலர்

  செய்திகள்

  பள்ளிப்பாளையத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
  X

  பள்ளிப்பாளையத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேரு திடலில் நடைபெற்றது.
  பள்ளிப்பாளையம்:

  நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேரு திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தர் மோகன் தலைமை தாங்கினார்.  நகர செயலாளர் வெள்ளிங்கிரி வரவேற்புரை ஆற்றினார்.

  ஒன்றிய பேரவை செயலாளர் செந்தில், குமார பாளையம் நகர செயலாளர் நாகராஜன், செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், பி.ஆர்.சுந்தரம் எம்.பி, செய்தி தொடர்பு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், பாசறை துணை செயலாளர் விஷ்ணு பிரபு, தலைமை கழக பேச்சாளர்கள் மணிமேகலை, தர்மராஜன், தேவசகாயம் மற்றும் பலர் பேசினார்கள்.

  இதில், நகர, ஒன்றிய பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×