என் மலர்

  செய்திகள்

  ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்: ஆர்.நல்லகண்ணு
  X

  ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்: ஆர்.நல்லகண்ணு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த வன்முறை குறித்து, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று ஆர்.நல்லகண்ணு கூறினார்.
  தேனி:

  தேனியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் என்பது, இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த அறவழி போராட்டம் ஆகும். இந்திய அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இந்த போராட்டம் அமைந்து இருந்தது. யாருக்கும் பாதிப்பு இன்றி, பொறுப்புடன் நடந்த இந்த போராட்டம் உலகமே ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.

  போராட்டம் நடத்தியவர்களிடம் மத்திய, மாநில அரசுகள் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து செல்ல அவர்களை அனுமதித்து இருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடே வேதனைப்படும் அளவுக்கு தாக்கி, போலீசார் விரட்டியடித்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

  மாணவர்களுக்கு உதவியதற்காக மீனவ மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தோழர் என்று சொன்னாலே துரோகிகள் என்று போலீஸ் துறை உயர் அதிகாரிகள் புதிய அவதூறு பரப்புகிறார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. கம்பராமாயணத்திலும், தேவாரத்திலும் தோழர் என்ற வார்த்தை சிறப்பித்துக் கூறப்படுகிறது.

  சென்னை மெரினா உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது தொடர்பாக உண்மை நிலையை அறிய ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். போராட்டத்தை வெற்றியாக முடிக்கவிடாமல், வன்முறையை நிகழ்த்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு ஆர்.நல்லகண்ணு கூறினார். 
  Next Story
  ×