என் மலர்
செய்திகள்

சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு மனோன்மணியம் நகரை சேர்ந்தவர் தேவராஜ். வியாபாரி. இவரது மனைவி சந்திரகுமாரி (வயது 54).
கணவன்- மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கினர். பின்னர் இன்று அதிகாலை சந்திரகுமாரி எழுந்த போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினும் மாயமாகி இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர் சந்திரகுமாரி அணிந்திருந்த தாலிச்செயினை பறித்துச் சென்றுள்ளான்.
இது குறித்து சந்திரகுமாரி சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து தாலிச்செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றார்.

Next Story