என் மலர்

  செய்திகள்

  திருப்பத்தூர் அருகே 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு
  X

  திருப்பத்தூர் அருகே 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அருகே 2 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூரில் இருந்து தருமபுரிக்கு நேற்றிரவு அரசு பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றது. திருப்பத்தூர் அடுத்த கண்ணாலப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, பின்புறம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

  இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்வீசிய மர்ம நபர்கள் பைக்கில் தப்பிவிட்டனர்.

  இதேபோல் திருப்பத்தூரில் இருந்து சேலத்திற்கு சென்றுக் கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ் மீது தோரணபதி என்ற இடத்தில் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.

  திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீச்சு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×