என் மலர்

  செய்திகள்

  கும்பகோணத்தில் ஸ்வீட் கடையில் பணம் திருட்டு வாலிபருக்கு வலைவீச்சு
  X

  கும்பகோணத்தில் ஸ்வீட் கடையில் பணம் திருட்டு வாலிபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணத்தில் ஸ்வீட் கடையில் ரூ. 4,500 பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  சுவாமிமலை:

  கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் இனிப்பு கடை நடத்தி வருபவர் வெங்கடேசன் (வயது 45). இவரது கடையில் ஸ்ரீதர்புரந்தான் ஒத்தக்கோவில் பகுதியை சேர்ந்த பாரதி என்பவரது மகன் பாண்டியன் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வேலையைவிட்டு நின்றுவிட்டார்.

  இதையடுத்து நேற்று கடைக்கு வந்த பாண்டியன் தான் மீண்டும் வேலைக்கு வருவதாக வெங்கடேசனிடம் கூறியுள்ளார். ஆனால் வேலைக்கு சேர்க்க மறுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புமாறு கூறிவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

  அப்போது கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.4500 பணத்தை பாண்டியன் திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். பின்னர் கடைக்கு வந்த வெங்கடேசன் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனைதேடி வருகின்றனர்.

  Next Story
  ×