என் மலர்

  செய்திகள்

  மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த காவலாளி பலி
  X

  மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த காவலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுபோதையில் இருந்த காவலாளி வாய்க்காலில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  தஞ்சாவூர்

  தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 75). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தவமணி (65). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

  சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஜெயபால் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் நடந்து
  வந்ததாக கூறப்படுகிறது.

  டவுன் கரம்பை சாலை, வண்ணாந்துறை அருகே வந்தபோது சாலையோரம் இருந்த வாய்க்காலில் ஜெயபால் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  இதுகுறித்து ஜெயபாலின் மனைவி தவமணி தஞ்சை நகர கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×