என் மலர்

  செய்திகள்

  வறட்சி நிவாரணம்: மாற்றாந்தாய் மனப்போக்கில் மோடி தமிழகத்தை வஞ்சிக்கிறார் - திருநாவுக்கரசர்
  X

  வறட்சி நிவாரணம்: மாற்றாந்தாய் மனப்போக்கில் மோடி தமிழகத்தை வஞ்சிக்கிறார் - திருநாவுக்கரசர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வறட்சி நிவாரணம் வழங்க நரேந்திர மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நெல் உற்பத்தி பெருமளவில் குறைந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார். தமிழகத்தில் வறட்சி நிலையை மதிப்பீடு செய்ய மத்தியக் குழு வருகை புரிந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

  ஆனால் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் விதிமுறைகளின்படி நெல் பயிர்களுக்கு மழை நீரை நம்பி சாகுபடி செய்த நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,800, பாசன வசதியுள்ள நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, காவிரி பாசனத்தை நம்பியுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு குறையாமல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

  தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பை மத்திய குழுவினர் இருமுறை வருகை தந்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பின்பும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு சல்லிக்காசு கூட தரவில்லை. நரேந்திர மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

  எதற்கெடுத்தாலும் வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடி தமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து மனம் திறந்து கருணை காட்டாதது ஏன்? தமிழகம் தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசால் வஞ்சிக்கப்படுவது நியாயமா? நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.தி.மு.க. தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தேவையான நிதியை பெறுவதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கிற வகையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
  Next Story
  ×