என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம்: வடமாநில வாலிபர் கைது
  X

  திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம்: வடமாநில வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தார்.
  திருப்பூர்:

  மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மனோஜ் பகிடி (வயது20). இவர் திருப்பூர் பாளையக்காடு மந்திரிதோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து பிரிண்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

  இவருடைய பக்கத்து வீட்டில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

  மனோஜ்பகிடி தனது பக்கத்து வீட்டுக்கு சென்று டி.வி. பார்ப்பது வழக்கம். சம்பவத்தன்று அவர், அந்த வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்த சிறுமியை நைசாக அழைத்து தனது மடியில் அமர வைத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள்.

  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

  இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் மனோஜ்பகிடியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தார்.
  Next Story
  ×