என் மலர்

  செய்திகள்

  பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் வி‌ஷம் குடித்த பெண் உயிரிழப்பு
  X

  பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் வி‌ஷம் குடித்த பெண் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் வி‌ஷம் குடித்த பெண் உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி அருகே புதுபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி கமலம் (வயது 41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் கமலத்துக்கும் உடுமலையை சேர்ந்த கதிர்வேல் (46) என்ற தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கதிர்வேலுக்கு திருமணமாகவில்லை.

  கமலம், கதிர்வேலுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விவகாரம், பரமனுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மனைவியை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கமலம், கள்ளக்காதலன் கதிர்வேலுடன் வாழ்ந்து வந்தார்

  இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பொள்ளாச்சி அருகே சுந்தரேகவுண்டனூரில் தாராபுரம் ரோட்டில் கமலமும், கதிர்வேலும் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக நெகமம் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

  சாலையோரத்தில் வி‌ஷம் அருந்திய நிலையில் கமலமும், கதிர்வேலும் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சிறிது நேரத்தில் கமலம் பரிதாபமாக அங்கேயே இறந்து விட்டார்.

  இதனால் கமலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிய கதிர்வேலையும் மீட்டு பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் பற்றி நெகமம் போலீசார் விசாரித்து வந்தனர்.
  Next Story
  ×