search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீர் தீ விபத்து: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    திடீர் தீ விபத்து: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் 3-வது மின் உற்பத்தி எந்திரம் கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    2-வது மின் உற்பத்தி எந்திரம் மின்சாரம் தேவை குறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்ற 3 எந்திரங்களும் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளியில் கொண்டு செல்வதற்காக தனியாக சுவிட்யார்டு பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

    இதையடுத்து அனைத்து மின் உற்பத்தி எந்திரங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் அனல்மின் நிலையத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

    இதையடுத்து அனல் மின் நிலையத்தில் தீயில் எரிந்து சேதமான டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் என்ஜினீயர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விடிய விடிய இப்பணியில் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் சீரமைப்பு பணி முடிவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×