என் மலர்

  செய்திகள்

  தேனி அருகே தனியார் நிறுவன மேலாளரிடம் நகை பறித்த 2 பேர் கைது
  X

  தேனி அருகே தனியார் நிறுவன மேலாளரிடம் நகை பறித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே தனியார் நிறுவன மேலாளரிடம் சங்கிலியை பறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 46). இவர் மேட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். சம்பவத்தன்று பெரியகுளம் புது பஸ்நிலையம் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

  அப்போது இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராஜகோபாலின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.

  விசாரணையில் அவர்கள் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (23). அழகர் (30) எனவும் இருவரும்தான் நகை திருடியது எனவும் தெரியவந்தது.

  Next Story
  ×