என் மலர்

  செய்திகள்

  கம்பம் அருகே பக்தர்கள் கார் மரத்தில் மோதி 2 பேர் பலி
  X

  கம்பம் அருகே பக்தர்கள் கார் மரத்தில் மோதி 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கம்பம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கம்பம்:

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எல்லப்பட்டி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கம்பம், சுருளிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா, சிவக்குமார் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பினர்.

  கம்பம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிவக்குமாரின் மகன் ரோகித் (வயது 7), ராஜேஷ்கண்ணா (40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

  காஞ்சனா (29), பவுன்தாய் (65), தீபா (40), ராஜ் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரைவர் தெய்வேந்திரன், தர்சன் (12) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

  Next Story
  ×