என் மலர்

  செய்திகள்

  உப்பளம் மைதானத்தில் குடியரசு தின விழா: கவர்னர் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்
  X

  உப்பளம் மைதானத்தில் குடியரசு தின விழா: கவர்னர் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை அரசு சார்பில் 68-வது குடியரசு தினவிழா இன்று உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்.
  புதுச்சேரி:

  புதுவை அரசு சார்பில் 68-வது குடியரசு தினவிழா இன்று உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

  குடியரசு தின விழாவையொட்டி உப்பளம் மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு தேசியக்கொடியுடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. சரியாக வலை 8.29 மணிக்கு கவர்னர் கிரண்பேடி உப்பளம் மைதானத்திற்கு வந்தார்.

  அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலாளர் மனோஜ்பரிதா ஆகியோர் வரவேற்று அழைத்துவந்தனர். நேராக மேடைக்கு சென்ற கவர்னர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

  இதைத்தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் பார்வையிட்டார். மீண்டும் மேடைக்கு திரும்பிய கவர்னர் சிறந்த போலீசாருக்கான பதக்கங்களை வழங்கினார்.

  போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வசிகாமணி, ராமச்சந்திரமோகன், இன்ஸ்பெக்டர் ராஜசங்கர்வல்லாட், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு கவர்னரின் காவல் பதக்கமும், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், கட்டாசுப்பாராவ் ஆகியோருக்கு கவர்னரின் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

  இதைத்தொடர்ந்து பள்ளி இறுதி தேர்வுகளில் சாதனை புரிந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் சுழற்கேடயங்களையும் கவர்னர் வழங்கினார். இதையடுத்து போலீசார், போலீஸ் அல்லாதோர், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் மேடையிலிருந்தபடி ஏற்றுக்கொண்டார்.

  தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பும், புதுவை காவலர் கீதம், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

  விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, விஜயவேணி, தீப்பாய்ந்தான், ராமச்சந்திரன், லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் அரசின் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
  Next Story
  ×