என் மலர்

  செய்திகள்

  தா.பேட்டை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
  X

  தா.பேட்டை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தா.பேட்டை அருகே ஆங்கில பாடம் சரிவர படிக்க முடியாத காரணத்தால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  தா.பேட்டை:

  தா.பேட்டை அடுத்த முத்தராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் விவசாயி. இவரது 2-வது மகள் சரண்யா (வயது 18) கண்ணனூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

  ஆங்கில பாடம் சரிவர படிக்க முடியாத காரணத்தால் மாணவி சரண்யா கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.

  வீட்டில் உள்ளவர்களிடம் அடுத்த வாரம் கல்லூரிக்கு போவதாகவும் சரண்யா கூறி உள்ளார். இதனால் மனஉளச்சலில் இருந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.

  அப்போது வீட்டிற்கு வந்த சரண்யாவின் பாட்டி தனபாக்கியம் வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஜன்னல் வழியாக சரண்யா தூக்கில் தொங்குவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓட்டைபிரித்து உள்ளே இறங்கி சரண்யாவை மீட்டு உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரண்யாவை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

  சம்பவம் குறித்து தா.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×