என் மலர்
செய்திகள்

திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் மாயம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பிரமன்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் காந்தி என்பவர் மகள் காயத்திரி (21). திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 26.12.16 அன்று தான் படித்த கல்லூரிக்கு சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருக்காட்டுப்பள்ளி போலீசில் அவரது தாய் லதா புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story