என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் 2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்
  X

  சேலத்தில் 2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் 2 மகன்களுடன் தாய் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம்:

  சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள முருங்கப்பட்டி, அய்யண்ணன் வளவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி (வயது 30). இவர்களுக்கு உதயகுமார் (13), பாலசூரியா (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தி மற்றும் அவரது மகன்கள் உதயகுமார், பாலசூரியா ஆகியோர் திடீரென மாயமாகி விட்டனர். இதையடுத்து கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் 3 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

  இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் 3 பேரும் மாயமான விவகாரம் குறித்தும், அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களை பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் அது குறித்து தகவலை அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  Next Story
  ×