என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 67 கன அடியாக குறைந்தது
  X

  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 67 கன அடியாக குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளது.

  மேட்டூர்:

  கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 36.17 அடியாக குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 56 கன அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 67 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

  அணையில் இருந்து குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட, அணைக்கு வருகிற தண்ணீர் குறைவாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

  இதனால் அணையின் நீர் தேக்க பகுதிகள் வறண்டு, அங்கு விவசாயிகள் பயிர் சாகுபடியை தொடங்கி உள்ளனர். நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  Next Story
  ×