என் மலர்

  செய்திகள்

  சோழவரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய 6 பேர் கைது
  X

  சோழவரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய 6 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செங்குன்றம்:

  சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் சோழவரம் நல்லூர் அருகே உள்ள நாகாத்தம்மன் நகர், பெருமாள் அடிபாதம், அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு ரகசிய தகவல் வந்தது.

  இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலாசுப்பிரமணி தலைமையில் போலீசார் இன்று அதிகாலையில் செங்குன்றம் அருகே உள்ள ஆட்டந்தாங்கல் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 6 பேரையும் ஒரு ரகசிய அறையில் வைத்து விசாரித்தனர்.

  விசாரணையில் செங்குன்றம் நாகாத்தம்மன் நகரை சேர்ந்த ரவுடிகள் சதீஷ், ரமேஷ் உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் யாரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல வந்தார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவர்களிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×