என் மலர்

  செய்திகள்

  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி
  X

  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

  இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததே வறட்சிக்கு காரணம். மழையில்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை செய்தோம்.

  தட்டுப்பாட்டை போக்க குடிநீர் சிக்கனம் அவசியம். குடிநீர் தொடர்பான புகாரை இணைய தளத்தில் தெரிவிக்கலாம்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×