என் மலர்

  செய்திகள்

  வேடசந்தூரில் அரசு பஸ்சில் திடீர் தீ: பயணிகள் அலறல்
  X

  வேடசந்தூரில் அரசு பஸ்சில் திடீர் தீ: பயணிகள் அலறல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேடசந்தூரில் இன்று காலை அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  வேடசந்தூர்:

  ஈரோட்டில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் இன்று காலை 10.30 மணி அளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராஜேந்திரன் ஓட்டினார். இந்த பஸ் திண்டுக்கல் அருகே வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் வந்தது. அப்போது பஸ்சில் திடீர் என தீ பிடித்தது.

  இதனை நேரில் பார்த்த பயணிகள் அலறினர். டிரைவர் ராஜேந்திரன், கண்டக்டர் ஆகியோர் பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.

  அந்த பஸ்சில் வந்த பயணிகள் பின்னர் வேறு பஸ்களில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×