என் மலர்

  செய்திகள்

  புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு: அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்
  X

  புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு: அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் நடந்தது.
  ராயபுரம்:

  தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், மருத்துவ மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் இன்று நடந்தது.

  அரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள், மாணவர்கள், அரசு டாக்டர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  எம்.பி.பி.எஸ் படித்து முடித்த மாணவர்கள் ‘நெஸ்ட்’ என்ற ‘எக்ஸ்சிட்’ தேர்வை எழுத வேண்டும் என்று புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வருகிறது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

  போராட்டம் குறித்துஅரசு டாக்டர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  எக்ஸ்சிட் புதிய தேர்வு முறை தேவையில்லை. எம்.பி.பி.எஸ் படிக்கும் போதே மாணவர்கள் தேவையான மருத்துவ பயிற்சியும், கல்வியும் அறிந்து இருக்கிறார்கள். அதன் பிறகு ஒரு தேர்வு முறை தேவையற்றது. அதனை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×