என் மலர்

  செய்திகள்

  திருவட்டார் அருகே வெளிநாடு செல்ல பணம் இல்லாததால் தொழிலாளி தற்கொலை
  X

  திருவட்டார் அருகே வெளிநாடு செல்ல பணம் இல்லாததால் தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவட்டார் அருகே வெளிநாடு செல்ல பலரிடம் பணம் கேட்டும் கொடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  திருவட்டார்:

  திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்ராஜ் (வயது 52). இவரது மனைவி ஷைலஜா (42). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
  ராபின்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். அதன்பிறகு இங்கு வேலை செய்து வந்தார்.

  இந்தநிலையில் ராபின்ராஜ்க்கு வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசை ஏற்பட்டது. ஆனால் அதற்கு அவருக்கு பணம் கிடைக்கவில்லை. பலரிடம் கடன் கேட்டும் பணம் கொடுக்கவில்லை. மேலும் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்ததால் கடந்த சில நாட்களாக குடித்து விட்டு மன வேதனையுடன் காணப்பட்டார்.

  இந்த நிலையில் நேற்று அவரது மனைவி தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு ராபின்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய சைலஜா கணவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பட்டாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×