என் மலர்

  செய்திகள்

  கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள்
  X

  கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் மொத்தம் 1406824 ஆண் வாக்காளர்களும், 1428002 பெண் வாக்காளர்களும், 276 3-ம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் உள்ளனர்.
  கோவை:

  கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.

  அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 1406824 ஆண் வாக்காளர்களும், 1428002 பெண் வாக்காளர்களும், 276 3-ம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் உள்ளனர்.

  பட்டியலை வெளியிட்டு கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  1.9.2016 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் 1409840 ஆண் வாக்காளர்களும், 1425119 பெண் வாக்காளர்களும், 215 -3ம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2835174 வாக்காளர்கள் இருந்தனர்.

  அதன்பிறகு வாக்காளர்கள் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டது. அதில் 44848 ஆண்களும், 46070 பெண்கள், 64-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 90982 பேர் சேர்க்கப்பட்டனர்.

  அதே போல இறந்தவர்கள் , இடம் மாற்றம் செய்யப்பட்டவர்கள், பல முறை பதிவு செய்தவர்கள் என மொத்தம் 91054 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது இறுதிபட்டியலில் கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 35 ஆயிரத்து 102 வாக்காளர்கள் உள்ளனர்.

  புதிதாக சேர்க்கப்பட்டவர்களில் 18, 19 வயதுடையவர்கள் 21,804 உள்ளனர். 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் 69178 பேர் ஆகும். கோவை மாவட்டத்தில் மொத்தம் 949 வாக்குசாவடி மையங்களும், 2892 வாக்குசாவடிகளும் உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, உதவி கலெக்டர் மதுராந்தகி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×