என் மலர்

  செய்திகள்

  வந்தவாசி அருகே தீ விபத்து: 2 குடிசைகள் எரிந்து நாசம்
  X

  வந்தவாசி அருகே தீ விபத்து: 2 குடிசைகள் எரிந்து நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் மின் கசிவு காரணமாக நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 2 குடிசைகள் எரிந்து நாசமானது.
  வந்தவாசி:

  வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 42) இவரது தம்பி ரவி(35) ஆகியோர்களது குடிசை வீடு அருகருகில் உள்ளது.

  குமார் இவரது மனைவி அமுல். ரவி இவரது மனைவி சித்ரா ஆகியோர் நேற்று நூறுநாள் வேலை திட்டத்தில் ஏரியை ஆழப்படுத்தும்பணிக்கு சென்றனர்.

  நேற்று பகல் 2 மணி அளவில் குமார் குடிசை வீட்டின் மேல்பகுதி தீ பிடித்து எரிந்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க போரா டினார்கள் ஆனாலும் தீ மளமளவென அருகில் இருந்த ரவி வீட்டின் கூரை மீது பரவியது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரபாக்கம் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

  இதில் சகோதரர்கள் 2 பேர் வீடும் எரிந்து முழுவதும் நாசமானது. தீ விபத்தில் குமார் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டும்பணியில் ஈடுப்பட்டுள்ளார். அடுத்த வாரம் தளம் அமைக்கும்பணி நடைப்பெற திட்டமிட்டுள்ளதால் இதற்காக உறவினர்களிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் பணம் கடன் வாங்கி வீட்டில் வைத்து இருந்தாராம். தீ விபத்தில் இந்த பணம் 10 சவரன் தங்க நகை அதேபோல் ரவி வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், 3 சவரன் தங்க நகை வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட ரூ.4.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.

  இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×