search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    முசிறி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
    X

    முசிறி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

    முசிறி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    முசிறி:

    முசிறி  பகுதியில் போலீஸ் சப்இன்ஸ் பெக்டர் கண்ணன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கருப்பம்பட்டி பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த சடையாண்டி (வயது55), முசிறி புதிய பஸ் நிலையம் பகுதியில் விற்பனை செய்த சந்திரன் (42), தும்பலம் பஸ் நிலையம் பகுதியில் விற்பனை செய்த உமையாள்புரத்தை சேர்ந்த பிச்சை (40), முசிறி போக்குவரத்து பணிமனை அருகே விற்பனை செய்து கொண்டிருந்த வேளா காநத்தத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (38) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார்.

    மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    Next Story
    ×