search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நீலகிரியில் கடும் உறைபனி: வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக குறைந்தது
    X

    நீலகிரியில் கடும் உறைபனி: வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக குறைந்தது

    நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி கொட்டியது. நேற்றும் இன்றும் ஊட்டியில் 4 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் கடுங்குளிரும் வாட்டியது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலையில் சிக்கி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்றும், இன்றும் மாவட்டத்தில் கடும் உறைபனி கொட்டியது. அரசு தாவரவியல் பூங்கா புல்வெளிகள் வெண்பட்டு உடுத்தியதுபோன்று பனி படர்ந்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தங்கள் செல்போன்களில் இயற்கை அழகை படம் பிடித்து மகிழ்ந்தனர். மாவட்டத்தின் பல பகுதிகள் காஷ்மீரை நினைவு படுத்தியது போன்ற இருந்தது.

    கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். வாட்டும் குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்கள் அவதியடைந்தனர்.

    உறைபனியால் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மலர்ச்செடிகளை காப்பாற்ற பிளாஸ்டிக் கவர்கள் போர்த்தப்பட்டன. நேற்றும் இன்றும் ஊட்டியில் 4 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்துள்ளது.
    Next Story
    ×