என் மலர்

  செய்திகள்

  கோவில்பட்டியில் கருகிய பயிர்களுடன் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
  X

  கோவில்பட்டியில் கருகிய பயிர்களுடன் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டியில் பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்ககோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  கோவில்பட்டி:

  தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கருகிய பயிர்களுடன் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச் செயலாளர்கள் சிவக்குமார், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் மேலப்பட்டி மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ் தொடங்கி வைத்தார். மாநில விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

  ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பால்ராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் லவராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், பவுன்மாரியப்பன், கொம்பையா, பொன்ஸ்ரீராம், கணேசன், நகர துணை செயலாளர் வனராஜன், நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சரவணன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் மணிராஜ், அழகர்சாமி, கொம்பையாபாண்டியன், கட்டபொம்மன் முருகன், வையாபுரி முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×