என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் சென்றுவர சுரங்கப்பாதை: அதிகாரிகள் ஆய்வு
  X

  திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் சென்றுவர சுரங்கப்பாதை: அதிகாரிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக அவர்கள் தனி ரெயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தனர். ரெயில் பயணிகளிடம் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றனர்.

  இதுகுறித்து கோட்ட மேலாளர் அனுபம் சர்மா கூறியதாவது:-

  ‘திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல உரிய நட வடிக்கை எடுக்கப்படும். விபத்துகளை குறைக்கும் வகையில், பயணிகள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

  புயலால் பாதிப்பு ஏற்பட்ட ரெயில்வே குடியிருப்பு பகுதிகள் சீர்செய்யப்படும். ரெயில் நிலையத்தில் கூடுதல் கழிவறைகள் கட்டப்படும்.

  ஆறாவது நடைமேடை அருகே பூட்டிக்கிடக்கும் ரெயில் பயணச்சீட்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும். தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பொதுமக்கள் அளித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதைத் தொடர்ந்து திருவள்ளூர் ரெயில் நிலைய முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பழுதடைந்த மெட்டல் டிடெக்டர்வாசலை அகற்றி, புதிதாக வைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் கடம்பத்தூர், திருவாலங்காடு வழியாக அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்றனர்.

  Next Story
  ×