என் மலர்

  செய்திகள்

  நீர்பிடிப்பு பகுதியில் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  X

  நீர்பிடிப்பு பகுதியில் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  கூடலூர்:

  பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை சரியாக பெய்யாததால் இந்த வருடம் பெரியாறு அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் பாசன வசதி பெறும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

  வைகை அணையிலும் நீர்மட்டம் உயராததால் மதுரை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 40 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. அவ்வப்போது பெய்யும் மழையே இப்பகுதி விவசாயிகளை ஆறுதல் படுத்தி வருகிறது.

  தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்து போனது. கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாகவும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியிலும் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் 23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 25.07 அடியை எட்டியுள்ளது.

  பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று இருந்த 111.60 என்ற நிலையிலேயே உள்ளது. அணைக்கு வரும் 200 கன அடி தண்ணீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 25.07, வரத்து 109 கன அடி. திறப்பு 40 கன அடி. இருப்பு 211 மி.கன. அடி. மஞ்சளாறு நீர்மட்டம் 34.90 அடி., சோத்துப்பாறை நீர்மட்டம் 60.84 அடி. வரத்து 11 கன அடி. திறப்பு 3 கன அடி.

  பெரியாறு 6.2, தேக்கடி 23.2, கூடலூர் 3.5, சண்முகாநதி அணை 9, உத்தமபாளையம் 2.2., வீரபாண்டி 2, வைகை அணை 1.2, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 2, கொடைக்கானல் 8.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

  Next Story
  ×