என் மலர்

  செய்திகள்

  ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி மாயம்
  X

  ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

  ஒரத்தநாடு:

  ஒரத்தநாடு அருகே தென்னமநாட்டில் உள்ள ராமவிலாஸ் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்தபகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி படித்து வந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தினர். அதற்கு அவர்கள் சரியான தகவலை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

  இதுகுறித்து மாயமான மாணவியின் தாய் சிவபதி ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×