என் மலர்

  செய்திகள்

  கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.40 கோடி நஷ்டம்
  X

  கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.40 கோடி நஷ்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோயம்பேட்டில் உள்ள மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் பெருமளவில் சரிந்துள்ளன. 50 நாட்களில் சுமார் ரூ. 40 கோடி அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
  சென்னை:

  நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந்தேதி அறிவித்தது.

  கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் சாமான்ய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றவும் வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவும் முடியாமல் மக்கள் கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களும் செயல்படாமல் மூடிக்கிடக்கின்றன.

  புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டுமே குறைந்த அளவில் வினியோகிகப்பட்டு வருகின்றன. புதிய ரூ.500 நோட்டு இன்னும் புழக்கத்திற்கு தாராளமாக வராததால் சில்லரை தட்டுப்பாடால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்து நிற்கும் பரிதாப நிலை இன்னும் நீடிக்கிறது.

  பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திய பண நீக்க நடவடிக்கை தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

  சிறு தொழில்கள், நிறுவனங்கள், சில்லரை வர்த்தகம் போன்றவை முடங்கின. பழைய ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு புதிய ரூபாய் நோட்டுகள் வினியோகிக்கப்படாததால் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

  சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் மூலப்பொருட்களை வாங்குவதற்கான ரொக்க பணம் இல்லாமலும் திண்டாடுகிறார்கள்.

  சென்னையில் ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் வீடுகளில் நடந்து வருகின்றன. அதனை சார்ந்து பல லட்சம் குடும்பங்களும் உள்ளன. இதுதவிர ஈக்காட்டுதாங்கல், அம்பத்தூரில் செயல்படும் சிறு தொழில்கள் இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளன.

  ஈக்காட்டுதாங்கலில் 2500 சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு சிறு தொழில்களை செய்து வரும் அவர்களுக்கு மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்த அளவு ரொக்கப் பணம் தேவைப்படும்.

  ஆனால் வங்கிகளில் நிலவி வரும் பணத் தட்டுப்பாடு, கட்டுப்பாடுகளால் இத்தொழில் சார்ந்தவர்கள் மோசமான சூழலை சந்தித்து வருகிறார்கள். சிறு தொழில் செய்வோர்கள் காசோலையை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ரொக்க பணத்தையே கையாள்வது வழக்கம்.

  மேலும் வார்தா புயலும் தங்களின் வாழ்வாதாரத்தை மாற்றி விட்டது என்று வேதனைப்படுகிறார்கள்.

  இது குறித்து தொழிற்சங்க துணைத்தலைவர் மோகன் கூறுகையில், வெல்டிங் தொழிலில் 5 முதல் 10 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ரூபாய் நோட்டு பிரச்சனையால் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது’ என்றார்.

  தோல் தொழில் சங்க தலைவர் ராஜ் அகமது கூறியதாவது:-

  ரூபாய் நோட்டு பிரச்சனைக்கு பிறகு 14 சதவீதம் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது இல்லை. தொழிலாளர்கள் தங்களது கூலியை எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்களில் பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள்.

  தொழிலாளர்கள் முறையாக வேலைக்கு வராததால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உற்பத்தி குறைவதால் ஆர்டர்களும் குறைகின்றன.

  தொழிலாளர்களின் சாப்பாட்டு பிரச்சனையை சமாளிக்க அருகில் உள்ள கடைகளில் ஏற்பாடு செய்துள்ளோம். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சிறு தொழில்கள், வியாபாரம் நசிந்து விட்டன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கோயம்பேட்டில் உள்ள மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் பெருமளவில் சரிந்துள்ளன. காய்கறி வியாபாரம் மட்டும் 50 சதவீதம் பாதித்துள்ளது. அங்குள்ள 900 மொத்த காய்கறி வியாபார கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 5 கோடிக்கு விற்பனையாகும். ரூபாய் நோட்டு விவகாரத்தில் தினமும் 30 சதவீத காய்கறிகள் தேக்கம் அடைந்து அழுகி வீணாகின்றன என்று காய்கறி மொத்த வியாபாரி சவுந்தரராஜன் தெரிவித்தார்.

  50 நாட்களில் சுமார் ரூ. 40 கோடி அளவுக்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வியாபாரமும் குறைந்து போனதால் காய்கறிகள் தேக்கம் அதிகரித்துள்ளது.

  புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவு வரவில்லை. பொது மக்களின் கூட்டமும் குறைந்துள்ளது.
  Next Story
  ×