என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
  X

  ஆண்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (வயது 34). ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.

  கடந்த 24-ந் தேதி உறவினர் வீட்டு விஷேசத்திற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடிக்கு சென்று விட்டார். நேற்று மதியம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

  இது குறித்து அருகில் இருந்தவர்கள் விக்னேசுக்கு போன் செய்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வரவே அதிர்ச்சியடைந்த விக்னேஷ் அவசரமாக வீட்டுக்கு விரைந்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  வீட்டின் பீரோவில் இருந்த 6½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

  இதனையடுத்து தேனியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவைழக்கப்பட்டு வீட்டின் அனைத்து இடங்களிலும் தடயங்களை பதிவு செய்தனர்.

  மேலும் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×