என் மலர்

  செய்திகள்

  நிலக்கோட்டை அருகே குழாயில் ஓட்டை போட்டு குடிநீர் திருட்டு
  X

  நிலக்கோட்டை அருகே குழாயில் ஓட்டை போட்டு குடிநீர் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே குழாயில் ஓட்டை போட்டு குடிநீர் திருடப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

  திண்டுக்கல்:

  நிலக்கோட்டை அருகே உள்ள செங்கட்டான்பட்டி சுந்தரராஜபுரத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இதற்கு வரும் தண்ணீரை சிலர் குழாய்களில் ஓட்டை போட்டு திருடுகின்றனர்.

  இதனால் மக்களுக்கு முறையாக போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை. தண்ணீருக்காக தனியார் தோட்டங்களில் உள்ள கிணறுகளை தேடி அழையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதமாக இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது. மேலும் இந்த குடிநீர் திட்டத்துக்காக 750 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 200 அடி அளவில் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

  இதனால் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. அதுவுத் திருடப்படுவதால் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.

  Next Story
  ×