என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல்லில் லாரி டிரைவர் மர்மச்சாவு
  X

  திண்டுக்கல்லில் லாரி டிரைவர் மர்மச்சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அய்யலூர் லாரி டிரைவர் திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

  குள்ளனம்பட்டி:

  அய்யலூர் அருகே உள்ள கல்பட்டியைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 37). லாரி டிரைவர். கடந்த 3 தினங்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று திண்டுக்கல் வந்த அர்ச்சுணன் மது குடித்துள்ளார்.

  அங்கு சுற்றித்திரிந்த அவர் இன்று காலை குள்ளனம்பட்டி அருகே சாக்கடையில் பிணமாக கிடந்தார். போதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து வீசினார்களா? என்று தெரிய வில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடையவர். இதனால் போதை காரணமாக திண்டில் படுத்திருந்த அவர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

  எனினும் உண்மை நிலவரம் குறித்து அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×