என் மலர்

  செய்திகள்

  முருகன்
  X
  முருகன்

  சூலூர் விமானப்படை தளத்துக்குள் மனநிலை பாதிக்கப்பட்டவர் புகுந்ததால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் விமானப்படை தளத்துக்குள் மனநிலை பாதிக்கப்பட்டவர் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  சூலூர்:

  கோவை அருகே உள்ள சூலூரில் விமானப்படைத்தளம் உள்ளது.

  இந்த விமானப்படைத்தளத்தில் நேற்று மர்மநபர் ஒருவர் புகுந்து ரன்வே பகுதியில் நடந்து சென்றார். இதைப் பார்த்த விமானப்படை அலுவலர்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

  இதையடுத்து பிடிபட்ட நபரை சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுப்பிரமணியபுரத்தை முருகன்(55) என்பதும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

  இதையடுத்து அவரை கோவை ஜே.எம்.7 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் அறிவுரையின் பேரில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் விமானப்படைத் தளத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி வெளி ஆட்கள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இது மூன்றாவது சம்பவமாகும்.
  Next Story
  ×