என் மலர்

  செய்திகள்

  வங்கி ஏ.டி.எம்.களில் மீண்டும் மக்கள் கூட்டம்
  X

  வங்கி ஏ.டி.எம்.களில் மீண்டும் மக்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் நகரில் வங்கி ஏ.டி.எம்.களில் மீண்டும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

  திண்டுக்கல்:

  இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு அதனை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி வந்தனர்.

  பொதுமக்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எடுப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு கெடுபிடிகள் விதித்துள்ளதால் தினமும் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைத்து வருகிறது. அதுவும் அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

  பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டு மட்டுமே கிடைத்ததால் அதனை மாற்ற முடியாமல் திணறி வந்தனர். திண்டுக்கல் நகரில் உள்ள ஒரு சில வங்கிகளில் ஒரே நாள் மட்டுமே 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது. அதுவும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒருசிலர் மட்டுமே பெற்றதால் 2 ஆயிரம் ரூபாய் தாளுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர்.

  திண்டுக்கல் நகரில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இன்னும் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. வங்கியில் இருந்து ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட்டவுடன் சிறிது நேரத்திலேயே காலியாகிவிடுகிறது. எனவே ஏ.டி.எ.ம். முன்பு இன்று அதிகாலைலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து வருகின்றனர்.

  பெட்ரோல் பங்குகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை. புதிய 2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை கிடைப்பதில்லை. வங்கியில் தற்போது பல வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்படுகிறது. அதனையும் வேறு வழியின்றி மக்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளது.

  நேற்று வங்கிகள் அனைத்தும் செயல்படாத நிலையில் இன்று காலையில் மீண்டும் பணம் எடுப்பதற்காக மக்கள் அதிக அளவில் ஏ.டி.எம். முன்பு குவிந்தனர். வழக்கம்போலவே குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே பணம் வந்து மீண்டும் ஏ.டி.எம். செயல்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  Next Story
  ×