என் மலர்

  செய்திகள்

  பரமத்திவேலூர் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைப்பு
  X

  பரமத்திவேலூர் பகுதியில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் பகுதியில் இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சற்று சிரமப்பட்டனர்.

  பரமத்திவேலூர்:

  தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சோழசிராமணி, ஜேடர்பாளையம், பிளிக்கல் பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்தி, கந்தம்பாளையம், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டது.

  இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்றும் கடைகளை அடைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பரமத்திவேலூர் பகுதியில் மீண்டும் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். கடைகள் அடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சற்று சிரமப்பட்டனர்.

  Next Story
  ×