என் மலர்

  செய்திகள்

  மீண்டும் ஏற்றப்பட்டது அதிமுக கொடி - தொடர் சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா
  X

  மீண்டும் ஏற்றப்பட்டது அதிமுக கொடி - தொடர் சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்வர் காலமானதாக வெளியான தகவல் தவறானது என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதிமுக கட்சி நிர்வாகத்தில் அரைகம்பத்தில் பறந்த கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.
  சென்னை:

  சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உயிர் இன்று மாலை பிரிந்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவானது.

  இதனால் மாநிலம் முழுவதும் ஒருவிதமான அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை முழுவதும் கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.

  மேலும், முதல்வர் இறந்துவிட்டதாக வெளியான தகவலை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.

  இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும், ஊடகங்களில் வெளியான தகவல் தவறானவை என்றும் அப்போலோ நிர்வாகம் தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து அதிமுக கட்சி நிர்வாகத்தில் அரைகம்பத்தில் பறந்த கொடி மீண்டும் ஏற்றப்பட்டது. மேலும் இந்த செய்தியை கேட்டதும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

  Next Story
  ×