என் மலர்

  செய்திகள்

  முதல்-அமைச்சர் பூரணகுணம் அடைந்து திரும்புவார்: பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
  X

  முதல்-அமைச்சர் பூரணகுணம் அடைந்து திரும்புவார்: பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரணமாக நலம் பெற்று பணிகளை கவனிக்க விரைவில் வருவார் என்று நம்புகிறேன் என மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி கேள்வி பட்டதும் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது முதலாவது நபராக சென்று பார்த்து அவர் பூரண நலமடைய வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தேன். சிகிச்சை பெற்று விரைவாக குணம் அடைந்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் பூரணமாக நலம் பெற்று பணிகளை கவனிக்க விரைவில் வருவார் என்று நம்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

  இவ்வாறு பொன். ராதா கிருஷ்ணன் கூறினார்.
  Next Story
  ×