என் மலர்

  செய்திகள்

  போதையில் வாகனம் ஓட்டிய 104 பேர் பிடிபட்டனர்
  X

  போதையில் வாகனம் ஓட்டிய 104 பேர் பிடிபட்டனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த வாகன சோதனையில் போதை ஆசாமிகள் 104 பேர் பிடிபட்டனர்.
  சென்னை:

  சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு விடிய, விடிய போலீசார் வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிடி ஆணை ரவுடிகளை மடக்கிப் பிடித்து கைது செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

  நேற்று முன்தினம் இரவு (சனிக்கிழமை) வழக்கமான சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 1862 சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். போதை ஆசாமிகள் 104 பேர் இந்த வாகன சோதனையில் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. பழைய குற்றவாளிகள் 47 பேரும், வாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் பிடிபட்டனர்.
  Next Story
  ×