என் மலர்

  செய்திகள்

  புன்னம்சத்திரம் பகுதியில் புகை கக்கும் வாகனங்களால் பொது மக்கள் அவதி
  X

  புன்னம்சத்திரம் பகுதியில் புகை கக்கும் வாகனங்களால் பொது மக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிக புகை கக்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்களை சரிசெய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  வேலாயுதம்பாளையம்:

  ஈரோடு - கரூர் சாலையில் புன்னம் சத்திரம் பகுதியில் ஏராளமான கார், லாரி, வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பல வாகனங்களில் மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்படுகின்றன.

  வாகனங்களில் என்ஞினை சரிசெய்யாமல் ஓட்டுகின்றனர். இதனால் பல வாகனங்கள் அதிக புகை கக்கும் வாகனங்களாக உள்ளன. இவ்வாகனங்களின் பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உடுப்புகள் மீது புகைப்படுவதாலும், முகத்தில் திடீரென அதிக புகைப்படுவதாலும் அவதியுற்று வருகின்றனர்.

  எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக புகை கக்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்களை சரிசெய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×