என் மலர்

  செய்திகள்

  சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்க அனுமதிக்கவேண்டும்: விக்கிரமராஜா
  X

  சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்க அனுமதிக்கவேண்டும்: விக்கிரமராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்.
  சென்னை:

  அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில் அனைத்து மாநில வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் மாநாடு டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது.

  மாநாட்டிற்கு தேசிய தலைவர் பி.பி. பார்டியா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், சேர்மன் மகேந்திரஷா, தேசிய முதன்மை துணைத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பேரமைப்பு பொதுச் செயலாளர் க.மோகன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, ஆம்பூர் கிருஷ்ணன், மற்றும் மாநில வணிக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  மாநாட்டில் புதிய நோட்டுகள் தட்டுப்பாட்டால் வணிகத்தில் ஏற்பட்ட முடக்கம், மின்னணு பரிமாற்றத்தால் வணிகர்களுக்கு ஏற்படும் சாதக-பாதகங்கள், முத்ரா வங்கி கடன் திட்டத்தை அமல்படுத்துதல், ஜி.எஸ்.டி. சட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் உள்ளிட்ட வணிகர்களின் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

  மாநாட்டில் தொழில் துறை செயலாளர் ரமேஷ் அபிஷேக், மாஸ்டர் கார்டு நிறுவன இயக்குனர் ரவி அரோரா, எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரி உத்தம்சிங் அலுவாலியா, ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் மாநாட்டில் மத்திய மின், நிலக்கரி எரிசக்தி துறை இணை மந்திரி பயூஸ் கோயல் கலந்து கொண்டார்.

  மாநாட்டுக்கு பிறகு மத்திய நிதி துறை இணை மந்திரி சந்தோஷ்குமார், அகர்வாலை பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா தலைமையில் நிர்வாகிகள் சென்று சந்தித்தனர்.

  அப்போது, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நடுத்தர வணிகர்கள் வாரம் ரூ.50 ஆயிரம், நடப்பு கணக் கில் ரூ.2 லட்சம் வரை எடுக்க அனுமதிக்க வேண்டும்.

  சில்லரை தட்டுப்பாட்டை போக்க 500, 100, 50 ரூபாய் நோட்டுக்களை அதிகப்படுத்த வேண்டும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் ரூ..50 லட்சம் வரை விற்பனை வரி விலக்கு வரம்பு வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

  அப்போது மாநில பொதுச் செயலாளர் க.மோகன், ஆம்பூர் கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, நிஜாப்தீனன், சிவக்குமார், முகம்மது ரவுப் உடனிருந்தனர்.
  Next Story
  ×