என் மலர்

  செய்திகள்

  கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார்: நாராயணசாமி
  X

  கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார்: நாராயணசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
  சென்னை:

  தி.மு.க. தலைவர் கருணாநிதி ‘ஒவ்வாமை’ நோயால் பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்ததால் 1-ந்தேதி அதிகாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

  ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் தொடர்கிறது. மருத்துவ குழுவினர் அளித்து வரும் சிகிச்சையால் கருணாநிதி வேகமாக குணம் அடைந்துள்ளார்.

  அவருக்கு ரத்த அழுத்தம், ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அனைத்து பரிசோதனை முடிவுகளும் திருப்தி தரக்கூடிய வகையில் உள்ளன. இன்று காலையிலும் ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்க்கப்பட்டது. அதிலும் குறைபாடு இல்லை.

  இப்போது கருணாநிதிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாள், செல்வி, கனிமொழி மற்றும் குடும்பத்தினர் கருணாநிதியை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

  புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவரது மகள் கனிமொழி எம்.பி.யிடம் விசாரித்தார்.

  கருணாநிதியின் சிறப்பு மருத்துவர் கோபாலையும் சந்தித்து விசாரித்து அறிந்தார். அப்போது ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

  ஆஸ்பத்திரி வளாகத்தில் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி கனிமொழியிடம் கேட்டறிந்தேன். அவர் நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

  கருணாநிதி அன்றாடம் அரசியல் நிகழ்வில் இருக்க கூடியவர். அவர் பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிக்கு விரைவில் திரும்புவார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கருணாநிதி ஓரிரு நாளில் வீடு திரும்புவார்” என்றார்.

  கருணாநிதி குணம் அடைந்துள்ள நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இன்று டிஸ்சார்ஜ் ஆகவில்லை.

  நாளை மாலையில்தான் மு.க.ஸ்டாலின் சென்னை வருகிறார். அதன் பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×