என் மலர்

  செய்திகள்

  சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்
  X

  சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு கட்டண ரெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
  சென்னை:

  சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 16 மற்றும் 30-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06001), மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

  மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து வருகிற 18 மற்றும் 27-ந்தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06002), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

  எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (06016), மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.

  மறுமார்க்கமாக வேளாங் கண்ணியில் இருந்து வருகிற 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில் (06015), மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணா குளம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் எர்ணாகுளம் டவுன் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது.

  மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×