search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து முகையூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருக்கோவிலூர்:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் எனவும் அறிவித்தது. இந்த நிலையில் போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வராத காரணத்தால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் முகையூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் நேற்று தங்களது கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரிகள், புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் இருந்து வரவில்லை. மேலும் 100, 50 ரூபாய் நோட்டுகளும் வங்கியில் இருப்பு இல்லை. எனவே பணம் வழங்க இயலாது என்று கூறினர். இதை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் வங்கியில் பணம் வழங்காததை கண்டித்து, அங்குள்ள திருக்கோவிலூர்–விழுப்புரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×