என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் லேசான தூரலுடன் மழை
Byமாலை மலர்1 Dec 2016 8:22 PM IST (Updated: 1 Dec 2016 8:22 PM IST)
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் புதுவை-வேதாரண்யம் இடையே நாளை காலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் லேசான தூரலுடன் மழை பெய்தது.
வேலூர்:
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நடா புயல் புதுவை-வேதாரண்யம் இடையே நாளை காலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான தூரலுடன் மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, அதனை சுற்றியுள்ள சேவூர், முள்ளிப்பட்டு, இரும்பேடு, எஸ்.பி. நகரம் மற்றும் செய்யாறு ஆகிய பகுதிகளில் காலை முதல் தூரலுடன் மழை பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அடுக்கம்பாறை, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது. பல இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்தது.
Next Story
×